நான் ஒரு சாதாரண மனிதன் ; இந்தியாவில் உள்ள ஏழைமக்களே என் தெய்வம் - ராகுல் காந்தி!! 
                                    
                                    
                                   I am an ordinary man Poor people in India are my God
 
                                 
                               
                                
                                      
                                            வயநாடு : நான் ஒரு சாதாரண மனிதன் ; இந்தியாவில் உள்ள ஏழைமக்களே என் தெய்வம் என வெற்றி பெற்ற வயநாடு தொகுதிக்கு சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தேசிய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வயநாடு தொகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டார் ராகுல் காந்தி. பின்னர் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
 
அப்போது ராகுல் காந்தி பேசுகையில், நான் இயற்கையாக மனிதனாக பிறந்தவன். நான் ஒரு சாதாரண மனிதன் இந்தியாவில் உள்ள ஏழை மக்களே என் தெய்வம். வயநாட்டில் உள்ள மக்களே என் தெய்வம் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நான் செய்வேன். பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு வினோதமான பரமாத்மா இருக்கிறார். அவர் அதானி மற்றும் அம்பானிக்கு ஆதரவாக முடிவுகளை எடுக்குமாறு வழி நடத்துகிறார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும் நன்றி. கட்சித் தொண்டர்கள் தலைவர்கள் பக்கம் தான் என் இதயம் உள்ளது. ஜனநாயகத்தை முன்னேற்றுவதற்காக எங்கள் கூட்டம் முயற்சி அனைத்தும் மக்களிடையே வலிக்கும் புதிதத்தில் அமைய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று ராகுல் காந்தி கூறினார்.
                                     
                                 
                   
                       English Summary
                       I am an ordinary man Poor people in India are my God