எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து: கவலைக்கிடமாக உள்ள தொழிலாளர்கள்!  - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தில் உள்ள ஒரு பேக்கரி சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதால் 15 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் மீட்கபட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி, காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

தீ விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hyderabad Gas cylinder explosion accident 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->