கர்ப்பிணி மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்ற கணவன்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தை அடுத்த நரசராவ்பேட்டையை சேர்ந்த ரேணு-சிவரஞ்சனி தம்பதியருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது மீண்டும் சிவரஞ்சனி கர்ப்பமாகியுள்ளார்.

ஆறு மாத கர்ப்பிணியான சிவரஞ்சனியை நரசராவ்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வேணு வயிற்றில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என தெரிந்து கொள்ள ஸ்கேன் செய்துள்ளார்.

ஸ்கேன் செய்தலில் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என கண்டறியப்பட்டதால் அதனை கலைக்க முடிவு செய்த வேணும் தனது தாயுடன் சேர்ந்து நாட்டு மருந்து என்ற பெயரில் பச்சிலைகளை அரைத்து சிவரஞ்சனிக்கு கொடுத்துள்ளார். 

அதனை குடுத்த சிவரஞ்சனி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவரஞ்சனி இறந்தது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கருவில் இருந்த குழந்தையின் அடையாளத்தை தெரிவித்த மருத்துவமனையிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குண்டூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

husband poisoned his pregnant wife and killed


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->