என்ன தைரியம் உனக்கு..! – பெண் அதிகாரியிடம் அஜித் பவார் சர்ச்சை பேச்சு..!- வைரல் video
How dare you Ajit Pawars controversial speech female officer Viral video
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், பெண் ஐபிஎஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணாவுக்கு மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சோலாப்பூரில் சட்டவிரோத மணல் அள்ளல் தொடர்பான விசாரணைக்கு சென்ற அஞ்சனாவிடம் தொலைபேசியில் பேசிய அஜித் பவார், "உனக்கு என்ன தைரியம்?" என கடும் எச்சரிக்கை விடுத்ததாக வீடியோ வெளியாகி சர்ச்சை கிளப்பியது.

இதனால் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்த அஜித் பவார், “சோலாப்பூர் மாவட்டத்தில் காவல்துறை அதிகரியுடனான உரையாடல் தொடர்பான சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
சட்ட அமலாக்கத்தில் தலையிடுவது எனது நோக்கமல்ல. நிலைமை மோசமடையாமல் இருப்பதையும் உறுதி செய்வதே எனது நோக்கம்.பொறுமையாகவும் உண்மையாகவும் தங்கள் கடமையைச் செய்யும் நமது காவல்துறை மற்றும் பெண் அதிகாரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
நான் சட்டத்தின் ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவன்.மேலும், மணல் கடத்தல் உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு நான் உறுதிபூண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
How dare you Ajit Pawars controversial speech female officer Viral video