இந்தியாவுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டிய 4 பேர் சிக்கியது எப்படி...? - டெல்லி காவலர்கள் அதிரடி..!
How 4 people caught who were plotting against India Delhi Police take action
டெல்லி சிறப்பு பிரிவு துணை ஆணையர் பிரவீன் குமார் திரிபாதி வெளியிட்ட தகவலின்படி, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் பிஹார் மாநிலங்களைச் சேர்ந்த சிலர் இணைய தளங்களை தளமாகக் கொண்டு மறைமுகமாக தீவிரவாத குழுவை உருவாக்க முயற்சித்து வந்ததாக ரகசிய தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலின் அடிப்படையில், குறித்த கும்பலை காவலர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து தொடர்ந்து பின்தொடர்ந்து வந்தனர்.அதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த மொசைப் அகமது (சோனு), மும்பையைச் சேர்ந்த முகமது ஹமாத், ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த ஷேக் இம்ரான், பிஹாரின் கதிஹார் பகுதியைச் சேர்ந்த முகமது ஷோகைல் ஆகிய 4 பேரை காவலர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த நபர்கள் தீவிரவாத அமைப்புகளின் கொள்கைகளாலும், தனி மத அடிப்படையிலான நாடு உருவாக்கும் சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டிருந்ததாகவும், குறிப்பாக ஜாகிர் நாயக் போன்ற மத பேச்சாளர்களின் உரைகளால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டு, இணைய தளங்கள் மூலம் பிறரையும் தீவிரவாத செயல்பாடுகளில் இணைக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சமூக ஊடகங்களை கருவியாகக் கொண்டு, தீவிரவாத கொள்கைகளை பரப்புதல், பயிற்சி திட்டங்கள் அமைத்தல், நிதி திரட்டல் போன்ற விவகாரங்களில் இந்தக் குழு ரகசியமாக ஆலோசனைகள் நடத்தியது தெரியவந்துள்ளது.
இவர்களில் ஒருவன் கடந்த டிசம்பர் மாதம் டெல்லி செங்கோட்டை மற்றும் இந்தியா கேட் பகுதிகளுக்கு சென்று ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நடவடிக்கைகளின் போது, குற்றவாளிகளிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
How 4 people caught who were plotting against India Delhi Police take action