17 வயது வீராங்கனை கருக்கலைந்து உடல்நலம் பாதிப்பு; கர்ப்பமாக்கிய ஹாக்கி பயிற்சியாளர் கைது..!
Hockey coach arrested for impregnating a 17 year old female player
அரியானா மாநிலத்தில் விளையாட்டுத் துறையில் உள்ள வீராங்கனைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமீபத்தில் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் மீது பாலியல் புகார் எழுந்த எழுந்தது. இந்த நிலையில், தற்போது ரேவாரி மாவட்டத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது, இங்குள்ள மைதானத்தில் கடந்த 03 ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி பெற்று வந்த 17 வயது சிறுமியை, அவரது பயிற்சியாளரே கடந்த 04 மாதங்களுக்கு முன்பு மைதானத்தில் உள்ள கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவத்தால் அந்தச் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து, கடந்த 05-ஆம் தேதி கருக்கலைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கடந்த 09-ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி புகாரின் அளித்துள்ளார்.
அதனபடி, நேற்று குறித்த பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 02 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
English Summary
Hockey coach arrested for impregnating a 17 year old female player