கொட்டித் தீர்த்த கனமழை.. அடித்து தூக்கிய சூறாவளி காற்று.. பரிதவிக்கும் தலைநகரம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது. கனமழை உடன் பலத்த காற்று வீசியதால் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து. இடியுடன் கூடிய கொட்டித் தீர்த்த மழையால், மரம் கார் மீது விழுந்தது. குழந்தை உட்பட மூன்று பேர் கொண்ட குடும்பம் காரிலிருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். 

கபுதார் மார்க்கெட்டில் பெய்த ஆலங்கட்டி மழையால் 60 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடக்கு டெல்லியில் பல பகுதிகளில் 40 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதால், மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த காற்று காரணமாக டெல்லியில் டெல்லி ஜூம்மா மசூதியில் மாட பகுதி உடைந்து விழுந்தது. இதில் மூன்று பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மரங்கள் விழுந்து தொடர்பாக 294 புகார்கள் பெறப்பட்டு உள்ளது என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy Rain in delhi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->