நெஞ்சை பதறவைக்கும் வக்கிர புத்தி..! பசு மாட்டுடன் வாலிபர் செய்த விபரீத காரியம்...! - சிசிடிவி-யில் சிக்கிய பகீர் காட்சிகள்...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் காட்டன் பேட்டை பகுதியில் அருவருப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் ஒருவர், தனது பசுமாட்டை வீட்டின் அருகிலுள்ள சாலையோரத்தில் கட்டி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து சுற்றித்திரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் மக்கள் நடமாட்டம் இல்லையென்பதை உறுதி செய்த அவர், சாலையோரத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாட்டுடன் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. அதில், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சுற்றுப்புறத்தை கவனித்து பார்க்கும் காட்சிகளும், பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சிகளும் தெளிவாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து காட்டன் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதுடன், கண்காணிப்பு கேமரா காட்சிகளும் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த காட்சிகளில் வாலிபரின் முகஅடையாளம் மற்றும் மோட்டார் சைக்கிளின் பதிவெண் தெளிவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவலர்கள் சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heartwrenchingly perverse intelligence bizarre thing young man cow CCTV footage


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->