உலகளவில் ட்ரெண்டிங் ஆன சிறுமி.. இவாங்கா ட்ரம்ப் ட்விட்.!!
Hariyana girl trending in world
தனது உடல் நலம் பாதித்த தந்தையை சைக்கிளில் அமர வைத்தபடி சுமார் 1200 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்ற 15 வயது சிறுமிக்கு இந்திய சைக்கிள் போட்டி கூட்டமைப்பானது பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் கிராமத்தில் இருந்து தனது சொந்த மாநிலமான பீகாருக்கு சைக்கிளில் உடல்நலம் பாதித்த தந்தையை தனது பின் இருக்கையில் அமர வைத்த சிறுமி ஜோதிகுமாரி, கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக சைக்கிளை இயக்கியுள்ளார்.
இந்த விஷயத்தை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் பதிவு செய்யவே, இதனை கண்ட இந்திய சைக்கிள் போட்டி கூட்டமைப்பின் தலைவர் பரிசோதனையில் சிறுமி தேர்ச்சி பெறும் பட்சத்தில் டெல்லியில் இருக்கும் தேசிய சைக்கிள் போட்டி அகாடமியில் தேர்வு செய்யப்படுவார் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், சிறுமியை தொடர்பு கொண்ட அவர், ஒரு மாதத்தில் டெல்லிக்கு வருமாறு கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில், இந்த விஷயம் இந்தியா முழுவதும் தெரிய வந்த நிலையில். தற்போது இது குறித்து தகவல் உலகம் முழுவதும் பரவியது.
அமெரிக்க அதிபரின் மகளான இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மேலும் ஜோதி குமாரி என்ற 15 வயது சிறுமி தனது தந்தையை 1200 கிலோ மீட்டர் தூரம் ஏறிய நாள் பயணம் செய்து தந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Hariyana girl trending in world