'ஆ.,பாச' வீடியோ: 300 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய 23 வயது கொடூரன்.! கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கயது எப்படி.?! - Seithipunal
Seithipunal


200 சிறுமிகள், 100 பெண்கள் உள்ளிட்ட 300 பேரை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்துக்கு உட்பட்ட பிரட்டாத்தூர் பகுதியை சேர்ந்தவன் பிரசன்னகுமார். பிரசன்ன குமார் பிடெக் படிப்பை பாதியிலேயே முடித்து விட்டு, பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.

இதற்கு அவர் பயன்படுத்தியது சமூக வலைதளம். சமூக வலைதளம் மூலமாக பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக பேசி, ஆசை வார்த்தை கூறி, ஆறுதல் சொல்வது போல் நடித்து, அவர்களை காதல் வலையில் வீழ்த்தி, பின்னர் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது வீடியோ எடுத்து, அதை வைத்து அந்த பெண்களை மிரட்டி பணம் பறித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டு வந்துள்ளான்.

குறிப்பாக, இவர்களின் வலையில் ஹைதராபாத், விஜயவாடா, கடப்பா பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் இவனின் காதல் வலையில், ஆசை வார்த்தையில், மயங்கி விழுந்து உள்ளனர். இதைவிட கொடூரமாக 200க்கும் மேற்பட்ட சிறுமிகளும் இவனது காதல் வலையில் விழுந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த 300 பேரிடமும் வீடியோவாக எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான் இவன். வெளியே சொன்னால் மானம் போய்விடுமே என்று எந்த பெண்ணும் இவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.

இந்த நிலையில், வீடுபுகுந்து செயின் பறிப்பு வழக்கில் பிரசன்னகுமார் போலீசார் கைது செய்த போதுதான், இந்த அனைத்து உண்மைகளும் வெளிவந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவன் பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது போலீசாரின் சிறப்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், போலீசார் அவனிடம் இருந்து 61 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், 30 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இவன் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girls trope aquest pressanna kumar arrested


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal