வாரணாசியில் இலவச படகு சவாரி.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில்  ரூ.1800 கோடி செலவில், 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 57,400 சதுரஅடியில், 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இந்தக் கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. 

மூன்று அடுக்குகளில், 12 நுழைவு வாயில்கள் பிரமாண்டமாக எழும்பியுள்ள இந்தக் கோவிலில் வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்தக் கோவிலுக்கு நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான காணிக்கைகள் அனுப்பப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஒரு அறக்கட்டளை அமைப்பினர் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று வாரணாசியில் இலவச படகு சவாரி அறிவித்து உள்ளனர். அதாவது "படகு ஓட்டுபவர்களை உள்ளடக்கிய நிஷாத் சமூகம், பகவான் ராமருடன் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது. 

ராமர் வனவாசம் சென்றபோது நிஷாத் ராஜ், அவர்களுக்கு படகோட்டியதுடன் பல உதவிகள் செய்து உள்ளார். அந்த பாரம்பரியத்தை முன்னெடுக்கும் வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் 22-ந்தேதி, இலவச படகு சேவை வழங்க தீர்மானித்து உள்ளோம். 

வாரணாசியில் கங்கையின் 82 படகு நிறுத்தங்களுக்கும் இலவச பயணம் செய்யலாம்" என்று மா கங்கா நிஷாத்ராஜ் சேவை அறக்கட்டளை அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு ராம பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free boat savari in varanasi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->