மாமல்லபுரம் || ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் மாயம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம், அனந்தபூர் பகுதியை சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் பதினெட்டு பேர் மற்றும் சித்தூர் மாவட்டத்தில் நலகாம்பள்ளியை சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் இருபத்து இரண்டு பேர் என்று மொத்தம் நாற்பது பேர் இரண்டு குழுக்களாக நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். 

அப்போது சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அந்த நேரத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் பத்து  மாணவர்களை ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்து சென்றது. இதைப்பார்த்த சக மாணவர்கள் கத்திக் கூச்சலிட்டதைக் கேட்டு வந்த மீனவர்கள் உடனே கடலுக்குள் சென்று ஐந்து மாணவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

மீதமுள்ள ஐந்து பேரில், நலகாம்பள்ளியை சேர்ந்த விஜய் என்ற மாணவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது. ஆனால், நான்கு பேர் கடலில் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுற்றுலா சென்ற மாணவர்கள் கடலில் மாயமாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four students missing in mamallapuram sea


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->