குஜராத்தில் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து; குழந்தை உட்பட 05 பேர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம், சூரத் மாவட்டம், லிம்பாயத் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதில், குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீவிபத்து சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஐந்து பேரும், உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் கிடைக்கபெறவில்லை. முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் அதிக அளவில் புடவைகள் இருந்தது தெரிய வந்தது. தீ விபத்து ஏற்பட்ட உடனேயே, வீடு முழுவதும் பீதி பரவிய நிலையில், தொடர்ந்து எல்லாப் பக்கங்களிலிருந்தும் புகை சூழ்ந்தது.

உயிரிழந்தவர்கள் தீ விபத்தால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Five people including a child killed in a fire at a residential building in Gujarat


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->