மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. 12 கொரோனா நோயாளிகள் பலி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிவேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகம் ,குஜராத், கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பரவி வருகிறது. குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 

இதனிடையே அகமதாபாத் நகரில் சினிமா, தியேட்டர், ஜிம், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது .வாகனங்களை இயக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடைகள், சந்தைகள் போன்றவை கடுமையான கட்டுப்பாடுகளுடன் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குஜராத் மாநிலம் பாரூச் நகரில் உள்ள படேல் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள்  சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சிகிச்சை மையத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் அங்கிருந்த மற்ற நோயாளிகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றினர். அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fire accident 12 corona patients death in gujarat


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->