பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை: இந்தியாவுக்கு முழு ஆதரவு..அமெரிக்கா மீண்டும் உறுதி!
Fight against terrorism India fully supports it America is reaffirmed
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்து உறுதி அளித்துள்ளது.
கடந்த 22-ந்தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகிற்து.இதையடுத்து கடந்த 23-ந்தேதி முதல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை உள்ளிட்ட அதிரடியான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதற்கு பாகிஸ்தானும் எதிர்வினை ஆற்றுவதால் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் போர் மோதல் போக்கை கைவிட்டு இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இங்கிலாந்து, சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஈரான் ஆகிய நாடுகளும், ஐ.நா.வும் வேண்டுகோள் விடுத்தன.
இதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ தனித்தனியாக தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை மந்திரியும், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் ஆதரவை தெரிவித்தார்.
இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்து உறுதி அளித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ் கூறியதாவது:-காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழலலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
கடந்த வாரம் பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் கூறியதுபோல் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா வலுவாக நிற்கிறது.இரு நாட்டு அரசுகளிடமும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இரு தரப்பினரிடம் இருந்தும் ஒரு பொறுப்பான தீர்வை நாங்கள் கேட்கிறோம்.
இவ்வாறு டாமி புரூஸ் கூறியுள்ளார்.
English Summary
Fight against terrorism India fully supports it America is reaffirmed