கோவில் திருவிழாவில் வெடி விபத்து - 15 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரியில் பிரசித்திபெற்ற ஜெகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் நேற்று  இரவு நரேந்திர புஷ்கரிணி நீர்நிலையின் கரையில் சந்தன் ஜாத்ரா திருவிழா சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

அப்போது சில பக்தர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பட்டாசு குவியல் தீப்பற்றி வெடித்தது. இதில் அங்கிருந்த பக்தர்கள் காயமடைந்தனர். அவர்களில் சிலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தண்ணீரில் குதித்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் படுகாயமடைந்த 15 பேரை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifteen peoples died puri jeganathar temple fire accident in odisha


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?



Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?




Seithipunal
--> -->