பெட்ரோல் ஊற்றி 3 குழந்தைகளை உயிருடன் எரித்த தந்தை! பின்னர், தானும் தற்கொ*லை! அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


நாகர்கர்னூல் (தெலங்கானா): குடும்ப பிரச்சனைகள் காரணமாக 36 வயதான தந்தை ஒருவர் தனது மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெல்டண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த புதன்கிழமை அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் கிடப்பதாக உள்ளூர்வாசிகள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை தொடங்கியது.

நேற்று (வியாழக்கிழமை), நாகர்கர்னூல் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் அந்த நபரின் இரண்டு மகள்கள் (வயது 8, 6) மற்றும் 4 வயது மகன் ஆகியோரின் உடல்கள் பாதியாக எரிந்தும், அழுகிய நிலையிலும் கண்டெடுக்கப்பட்டன.

ஆந்திர பிரதேசம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர், குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறினால் தனது மனைவியை விட்டு மூன்று குழந்தைகளுடன் ஆகஸ்ட் 30ஆம் தேதி நாகர்கர்னூலுக்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர் தனது குழந்தைகளை கொன்று, அவர்களின் உடல்களுக்கு பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, பின்னர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father pours petrol on 3 children and burns them alive Then commits suicide himself Shocking incident


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->