தொடந்து தோல்வியில் முடியும் பேச்சுவார்த்தை - பேரணிக்கு தயாராகும் விவசாயிகள்.! - Seithipunal
Seithipunal


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் பேரணி நடத்த திட்டமிட்டு புறப்பட்டனர். அவர்களை எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி விவசாயிகள் சென்றதால் போலீசார் அவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி தடுத்தனர்.

இதற்கிடையே மத்திய அரசு விவசாயிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி அனைத்தும் தோல்வியில் முடிந்ததை அடுத்து 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது சோளம், சில பருப்பு வகைகள், காட்டன் உள்ளிட்டவைகளுக்கு பழைய குறைந்தபட்ச ஆதார விலை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அரசு ஏஜென்சிகள் விளைபொருட்களை கொள்முதல் செய்யும். கொள்முதல் செய்வதற்கு அளவு நிர்ணயம் கிடையாது என்று மத்திய அரசு பரிந்துரை செய்தது.

இது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவை சொல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதற்காக இரண்டு நாட்கள் காலஅவகாசமும் கேட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிக்கப்படுகிறது. பேரணி தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmers again rally announce in delhi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->