நெருங்கும் தேர்தல் - வங்கிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அடுத்த மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரியம் மற்றும் டெல்லியில் உள்ள வருவாய்த் துறை உள்ளிட்டவை சந்தேகத்திற்கிடமான பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள், இலவசங்கள் மற்றும் கடத்தப்பட்ட பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதைத் தடுப்பதற்காக தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் வங்கிக் கணக்குகளில் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மற்றும் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் குறித்து தினசரி தகவல் தெரிவிக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இது அமலில் இருக்கும் என்பதால், கண்காணிப்புக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வங்கிகள் தயாராகி வருகின்றன. ஊழியர்களின் சிறப்புக் குழுக்களை அமைக்கத் திட்டமிட்டுள்ள வங்கிகள், சந்தேகப்படும்படியான பணப் பரிவர்த்தனைகள் குறித்து தினமும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

extra employees add in bank election commission order


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->