பரபரப்பு! ரகசியமாக நடந்து முடிந்த அர்ஜுன் டென்துல்கரின் நிச்சயதார்த்தம்...!
Excitement Arjun Tendulkars engagement took place secret
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று போற்றப்படும் ''சச்சின் டெண்டுல்கர்''. அவரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் பேத்தியுடன் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

மும்பையில் ஹாஸ்பிடலிட்டி துறையில் கொடிகட்டிப் பறப்பவரும்,பிரபல தொழிலதிபருமான ''ரவி காய்'' என்பவரின் பேத்தி ''சானியா சந்தோக்".தற்போது சானியாவுக்கும், அர்ஜுன் டெண்டுல்கருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
பிரபல ரவி காய், புரூக்ளின் கிரீமரி ஐஸ்கிரீம் பிராண்ட் மற்றும் புகழ்பெற்ற இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் ஆகியவற்றின் உரிமையாளர்.மேலும், சானியா சந்தோக், மும்பையில் செல்லப் பிராணிகளுக்கான 'மிஸ்டர் பாவ்ஸ்' (Mr Paws) என்ற சலூனை நிறுவி நடத்தி வருகிறார்.
இந்த அர்ஜுன் மற்றும் சானியாவின் நிச்சயதார்த்த விழாவில், இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.இந்த நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்களோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ இதுவரை டெண்டுல்கர் குடும்பத்தின் சார்பில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Excitement Arjun Tendulkars engagement took place secret