மணக்கோலத்தில் காதலி ஊர்வலம்.. துடிதுடித்த காதலன் செய்த காரியம்.. நின்று போன திருமணம்.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் மணப்பெண்ணுக்கு அவரது காதலன் முத்தமிட்ட சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கரீம் நகர் மாவட்டத்தில் ஒரு திருமண மண்டபத்தில் 3 மணி நேரம் பெரும் கலவரமே அரங்கேறியுள்ளது. ஹுஸுராபாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

அதன்பின்னர், திருமண ஏற்பாடும் தடபுடலாய் நடைபெற்றது. அப்போது ஊர்வலம் நடக்க, திடீரென எங்கிருந்தோ அந்த பெண்ணின் காதலன் குடித்துவிட்டு அங்கு வந்து கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார். 

பின்னர் அந்த பெண்ணுக்கு நச் என்று ஒரு முத்தமும் கொடுத்துள்ளார். நாங்கள் இருவரும், காதலிக்கிறோம். இது கட்டாய கல்யாணம் என்று கூறி கலாட்டா செய்துள்ளார். தன் காதலியை திருமணம் செய்து வைக்க கோரி கைகளையும் பண்ணியிருக்கிறார். 

பின்னர் வந்த போலீஸ் அவரை கைது செய்ய முற்பட்டதும், மனம் தாங்காத காதலி, வாயைத் திறந்தார். “நாங்க இருவரும் காதலிப்பது உண்மைதான், ரெண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுறோம்"என்று சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருடன் கோபித்து கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex lover marriage stopped by lover


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal