அதிரடி காட்டிய அமலாக்கத்துறை - 11.25 கோடி பணம், 120 கோடி ஆவணங்கள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


பணமோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான சில தகவல்களை அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் பெற்றதன்  படி பிப்ரவரி 29-ம் தேதி சில இடங்களில் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் 8 இடங்களில் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். 

அதாவது, விஜய் டாடா அசோசியேட்ஸ், ஆர்.எஸ்.சந்திரசேகர், முனிராஜு, கே. டி.நாகேந்திரபாபு, மஞ்சுநாத் உள்ளிட்டோருக்கு சொந்தமான நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணக்கில் இருந்து சுமார் 11.25 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமின்றி, 120 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மக்களிடம் இருந்து பெற்ற பணத்தை வேறு இடங்களில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.250 கோடி பெறப்பட்டது. அந்த பணத்தை மக்கள் திருப்பி கேட்டால் மிரட்டப் பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் அமலாக்க இயக்குநரகத்தின் கவனத்திற்கு வந்ததையடுத்து, அவர்கள் இந்த சோதனையை நடத்தியதாக தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

enforcement department seized eleven crores money and 120 crores certificate in banglore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->