டோல்கேட்டில் நிற்காத லாரியின் முன் சிக்கிய ஊழியர்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில், நந்தியாவிலிருந்து கர்னூலை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி அம்மகட்டா டோல்கேட்டிற்கு வந்த போது, ஊழியர்கள் பாஸ்ட் டேக்கை ஸ்கேன் செய்தனர். 

சரியாக பாஸ்ட் டேக் ஸ்கேன் ஆகாவில்லை என்பதால், ஸ்கேனர் கொண்டு வந்து லாரி முன் ஒட்டப்பட்டிருந்த பாஸ்ட் டேக்கை ஸ்கேன் செய்தார். டோல்கேட்டின் தடுப்பு திறந்து கொண்டதால், ஓட்டுநர் லாரி முன் நிற்கும் ஊழியரை கவனிக்காமல் லாரியை ஓட்டிச் சென்றார்.

ஊழியர், லாரி முன்பு இருந்த பம்பரை கெட்டியாக பிடித்து கொண்டு சத்தமிட்டார். லாரி வேகமாக சென்றதால்  ஓட்டுனருக்கு, அவர் சத்தமிடுவது கேட்கவில்லை. இதனை கண்ட வாகன ஓட்டிகள் லாரியை துரத்தி சென்றனர்.

இரண்டு கிலோ மீட்டர் கடந்து சென்ற லாரியை, வாகன ஓட்டிகள் பின் தொடர்ந்து சென்று பம்பரில் ஊழியர் தொங்கி கொண்டு இருப்பதை தெரிவித்தனர். ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு, ஊழியர் லாரியின் முன்பாக இருப்பது தெரியவில்லை என தெரிவித்தார. பின்னர், டோல்கேட் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஊழியர் சீனுவை பத்திரமாக அழைத்து சென்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

employee stuck front of the truck at tollgate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->