வாக்காளர் பட்டியலில் முறைகேடு: வழக்கில் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்: ராகுல்காந்திக்கு தேர்தல் கமிஷன் அறிவுரை..!
Election Commission advises Rahul Gandhi to wait for verdict in voter list corruption case
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கர்நாடகா சட்டசபை தேர்தலின் போதும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்துள்ள தேர்தல் கமிஷன் வட்டாரங்கள், ' தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும், ' எனத் தெரிவித்துள்ளது.
பீஹாரில் நடந்து வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்ற நிலையில், இது தொடர்பாக ராகுல் கூறியுள்ளதாவது:
தேர்தல் கமிஷன் தனது வேலையைச் செய்ய தவறிவிட்டது என்றும், கர்நாடகாவில் ஒரு இடத்தில் மோசடியை தேர்தல் கமிஷன் அனுமதித்ததற்கான 100 சதவீத ஆதாரம் என்னிடம் உள்ளது எனவும், ஒரு தொகுதியை ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கையில்; ராகுலின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை என்றும், தேர்தல் வெற்றி தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டால், அதன் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பொய்யான குற்றச்சாட்டுகளை இப்போது தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
English Summary
Election Commission advises Rahul Gandhi to wait for verdict in voter list corruption case