போலி மருந்துகள் தயாரித்த 18 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து.!
eighteen medicines company license cancel
கடந்த பதினைந்து நாட்களாக நாட்டில் தரமில்லாத, போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் இருபது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் படி அதிகாரிகள் 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில், நிறுவனங்களில் போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் 18 நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து, 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:- "மொத்தம் 203 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான நிறுவனங்கள் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தது. அங்கு மட்டும் சுமார் 70 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலத்தில் 45 நிறுவனங்களும் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 23 நிறுவனங்களும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இனி வரும் நாட்களில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும்" என்றுத் தெரிவித்து உள்ளனர்.
English Summary
eighteen medicines company license cancel