போலி தங்க நாணையத்தைக் கொடுத்து தொழிலதிபரிடம் பண மோசடி - 2 பேர் கைது.!
eight lakhs money fraud to bussines man in telungana
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டம் சாலக்குர்தி தாண்டவை சேர்ந்தவர் பாஸ்கர். தொழிலதிபரான இவரை விஜய நகரம் மாவட்டம், கோட்டூர், பட்டண அள்ளி பகுதியைச் சேர்ந்த மாரப்பா, பிரகாஷ், சுரேஷ் ஆகியோர் சந்தித்து, தங்களிடம் ½ கிலோ எடையுள்ள ஒரிஜினல் தங்க நாணயங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், அதிக மதிப்புடைய தங்க நாணயங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதனை உண்மை என்று நம்பிய பாஸ்கர் அவர்கள் வைத்திருக்கும் தங்க நாணயங்களை வாங்கி கொண்டு அதற்கு ஈடாக ரூ.8 லட்சம் பணம் கொடுத்தார்.

இதையடுத்து பாஸ்கர் அந்த தங்க நாணயங்களை சோதனை செய்ததில் அது போலியானது என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக பாஸ்கர் ஜகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் படி போலீசார் விரைந்து சென்று மாரப்பா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக உள்ள சுரேஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
eight lakhs money fraud to bussines man in telungana