இன்று முதல் அமலில்...! ATM பரிவர்தனைகளுக்கான கட்டண உயர்வு...!
Effective from today Increase fees for ATM transactions
ஏ.டி.எம்( Automated Teller Machine ) எந்திரத்தை பயன்படுத்துபவர்களுக்கு, சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவ்வகையில், ஏ.டி.எம். கார்டு மூலம் ஸ்டேட்மென்ட் எடுப்பது, பணம் எடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு ஏ.டி.எம். எந்திரத்தை, ஒரு மாதத்துக்கு 5 முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதற்கு மேல் பயன்படுத்தினால் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒவ்வொரு முறையும் வங்கிகள் கட்டணம் வசூலிக்கும்.அவ்வகையில், இதுவரை வங்கிகள் இலவச பரிவர்த்தனை வரம்பை முடித்த பிறகு, மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ.21-ஐ கட்டணமாக வசூலித்து வந்தன.
இன்று முதல் இந்த கட்டணம் ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மே 1-ந் தேதி (இன்று) முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேலும்,பெருநகரங்களில் 1 மாதத்தில் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளும்,மற்ற நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகளும் செய்யலாம் என்றும் பரிந்துரையை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை சரிபார்த்தால், ரூ.7 கட்டணம் செலுத்த வேண்டும், முன்பு இதற்கு கட்டணம் ரூ.6 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Effective from today Increase fees for ATM transactions