மக்களவை தேர்தல் || இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட முதற்கட்ட அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் தேதி இன்று வெளியாக உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பணி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

அதில் குறிப்பாக தபால் வாக்கு சீட்டுகள் தயார் செய்யும் பணியை கண்காணிக்க ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உடனே தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும்.

தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்

ஒரு பண்டலுக்கு 50 வாக்கு சீட்டுகள் என்ற அடிப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது இந்திய தேர்தல் ஆணையம். 

இன்று பிற்பகல் 3 மணிக்கு நாடு முழுவதும் நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் சில மாநிலங்களின் சட்டமன்ற பொது தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI released guidelines protocol to all states ec


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->