காலை நேரத்தில் நில அதிர்வு...! மேகாலயாவில் 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...!
earthquake morning 2point7 magnitude earthquake strikes Meghalaya
மேகாலயா மாநிலத்தின் மேற்கு காசி மலைப்பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் பதிவானது. காலை 8.21 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 2.7 அளவிலான இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.53 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 91.20 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதிகளில் மையம் கொண்டதாக முதற்கட்டமாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் லேசான அளவில் இருந்ததால், சேதம் அல்லது உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இருப்பினும், நில அதிர்வுகள் ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
earthquake morning 2point7 magnitude earthquake strikes Meghalaya