'ரொம்ப பிடிக்கும், அழகான வார்த்தை அது'; மிகப்பெரிய பணக்காரர்களாகி வர காரணம் வரிகள்: டொனால்ட் டிரம்ப்..!
Donald Trump says taxes are the reason America is becoming so rich
அமெரிக்க அதிபராக 02வது முறையாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற நாளில் இருந்தே, உலக நாடுகளுக்கு எதாவது ஒரு வகையில் வரி விவிதித்து கொண்டே வருகிறார். அதாவது, மருந்து பொருட்கள் தொடங்கி சினிமா வரை அனைத்திற்கும் அதிக வரி விதித்து உலக நாடுகளை அதிரவைத்துளளார்.
இந்த சூழலில் வெள்ளை மாளிகை நிகழ்ச்கி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் பேசிய ட்ரம்ப் 'எனக்கு வரிகள் ரொம்பப் பிடிக்கும். மிக அழகான வார்த்தை' என அவர் வெளிப்படையாக பேசியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நிகழ்ச்சியில் டிரம்ப் பேசிய அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

'எனக்கு வரிகள் ரொம்பப் பிடிக்கும். மிக அழகான வார்த்தை. வரி விதிப்பதால் நாம் மிகப்பெரிய பணக்காரர்களாகி வருகிறோம். நாம் டிரில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டினோம். இந்த வரி விதிக்கும் முடிவை நாம் கைவிட்டால் நம்மிடம் இருக்கும் பணம் ஒருபோதும் இருக்காது. மற்ற நாடுகள் பல ஆண்டுகளாக நம்மைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்போது நாம் அவர்களை நியாயமாக நடத்துகிறோம்.
நான் பதவியேற்றதும் கையெழுத்திட்ட முதல் நிர்வாக உத்தரவுகளில் ஒன்று தகுதியின் கொள்கையை மீட்டெடுப்பது. அதுதான் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பது ஆகும். வரிவிதிப்பு என்ற வார்த்தையை நான் விரும்புகிறேன். வரிவிதிப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தின் முன் ஒரு பெரிய வழக்கு உள்ளது, ஆனால், மற்ற நாடுகள் நமக்குச் செய்தது இதுதான் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. வரிவிதிப்பால் வரும் பணம் நாம் இதுவரை பார்த்திராத ஒன்று. அது நிறைய போர்க்கப்பல்களை வாங்க போதுமானது.' என்று டொனால்ட் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Donald Trump says taxes are the reason America is becoming so rich