டோமினோஸ் பீட்ஸா மாவுக்கு மேல் டாய்லெட் பிரஷ் விவகாரம்.. டோமினோஸ் நிறுவனம் வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


பீட்சா என்று கூறினால் விரும்பாதவர்களே இருக்க முடியாது. இன்றைய இளம் தலைமுறையினர் கொண்டாட்டம் என்றாலே பீட்சா ஆர்டர் செய்வது வழக்கம். ஆனால், சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்று பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. 

பெங்களூருவை சேர்ந்த துஷார் என்ற நபர் ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டோமினோஸ் பீட்சா தயாரிக்கும் இடம் என்று கூறி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்பொழுது பீட்சா தயாரிக்கும் மாவின் மேல் டாய்லெட் சுத்தம் செய்யும் பொருட்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.

இதை பார்த்த பலருக்கும் அருவருப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து டோமினோஸ் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 

இந்த நிலையில் டோமினோஸ் விற்பனை நிறுவனம் இது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "உலகத்தரம் வாய்ந்த சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் நிறுவனம்தான் டோமினோஸ். சமீபத்தில் வெளியான புகைப்படம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் சுகாதாரத்திற்கு நாங்கள் என்றுமே கடமைப்பட்டுள்ளோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dominos about issue Of Bangalore factory


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->