கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா...? ஜாக்கிரதை...! - ஆர்.பி.ஐ. கொண்டு வந்துள்ள அதிரடி மாற்றங்கள் என்ன...?
Do you have a credit card Be careful What drastic changes brought by RBI
இந்திய ரிசர்வ் வங்கி, கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களுக்கு முக்கிய நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. புதிய நடைமுறையின் படி, கிரெடிட் கார்டு பில் தொகையை குறிப்பிட்ட கடைசி தேதிக்குள் செலுத்த முடியாதவர்களுக்கு கூடுதல் 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட உள்ளது.

இதனால், கடைசி தேதி முடிந்த பின்னரும் மூன்று நாட்கள் வரை எந்தவித அபராதமும் இன்றி தொகையை செலுத்தும் சலுகை கிடைக்கும். மேலும், இந்த இடைக்காலத்தில் சிபில் மதிப்பெண்ணும் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விதி 2027 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், இந்த 3 நாள் அவகாசத்தையும் கடந்த பின் பணம் செலுத்தாமல் தாமதித்தால் மட்டுமே கடன் வரலாற்றில் எதிர்மறை தாக்கம் ஏற்படும். சிபில் மதிப்பெண் குறைந்தால், எதிர்காலத்தில் வீட்டு கடன் அல்லது வாகனக் கடன் பெறுவது சிரமமாக மாறும்.
இதனால், திடீர் நிதி நெருக்கடி அல்லது தொழில்நுட்ப சிக்கல்கள் போன்ற காரணங்களால் பணம் செலுத்த முடியாத சூழலில், இந்த கூடுதல் 3 நாள் அவகாசம் பயனுள்ளதாக அமையும் என்பதால், கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை அளிக்கிறது.
English Summary
Do you have a credit card Be careful What drastic changes brought by RBI