உலக அமைதிக்காக 8,000 கி.மீ., தூரம் நடைபயணம் செய்து சபரிமலை வந்த பக்தர்கள்..! - Seithipunal
Seithipunal


உலக அமைதிக்காக 08 ஆயிரம் கி.மீ., தூரம் நடைபயணமாக வந்து சபரிமலையில் இரண்டு பக்தர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சனத்குமார் நாயக் மற்றும் சம்பத்குமார் ஷெட்டி. இவர்கள் உலக அமைதிக்காக சபரிமலைக்கு நடைபயணம் மேற்கொண்டு வழிபாடு நடத்த வேண்டும் என முடிவு செய்து இதனை செய்து முடித்துள்ளனர்.

இதற்காக கடந்த ஆண்டு மே-26 இல் கேரளாவில் இருந்து பத்ரிநாத்திற்கு ரயில் மூலம் சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் இருமுடி கட்டி ஜூன் 03-ஆம் தேதி தங்களது பயணத்தை இருவரும் ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் செல்லும் வழியில், பல்வேறு ஆன்மிக ஸ்தலங்கள் மற்றும் கோவிலுக்குள் சென்று, சங்கராச்சாரியார் உருவாக்கிய மடங்களுக்கும் சென்றுள்ளனர். 

வழியில் பல்வேறு கோயில்களில் தங்கிய அவர், அங்கேயே சமைத்து சாப்பிட்டுள்ளதோடு, அயோத்தி, உஜ்ஜயினி, புரி, சிவசங்கர், ஜகன்நாத், ராமேஸ்வர், அச்சன்கோவில், எருமேலி வழியாக சபரிமலையை வந்தடைந்துள்ளனர்.குறித்த  இவர்கள் உலக அமைதி வேண்டி ஐய்யப்பனிடம் வேண்டிக் கொண்டதாக இன்று சபரிமலை தேவஸ்தானம் கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Devotees who walked 8000 km to Sabarimala for world peace


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->