மதுரை சித்திரை திருவிழா - கூட்டத்தில் பக்தர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரையில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்ற ஒரு விழாவாகும். இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகேவுள்ள அழகர் கோவிலையும் இணைத்து நடைபெறவுள்ளது. 

அந்த வகையில் இந்த வருடத்திற்கான சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, இன்று காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். 

இவரை வரவேற்பதற்காக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்தார். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் கூட்டத்தில் இருந்த பூமிநாதன் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. 

உடனே அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்ட போதும் பூமிநாதன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

devotees died in madurai sithirai festival


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->