திருப்பதி திருமலை புஷ்கரிணியில் மீண்டும் பக்தர்கள் நீராட அனுமதி: பெண்களுக்கு இலவச பஸ் பயணம்..! - Seithipunal
Seithipunal


திருமலை திருப்பதி தேவஸ்தான தெப்பக்குளத்தில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இதன்காரணமாக இனிவரும் காலங்களில் பக்தர்கள் மீண்டும் நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த ஜூலை 20-ஆம் தேதி திருப்பதி தேவஸ்தானம் தெப்பக்குளம் புனரமைக்கும் பணிகளை தொடங்கியது. 

இதன் ஒரு பகுதியாக, நீர்வளத் துறையை சேர்ந்த சுமார் 100 ஊழியர்கள் தெப்பக்குளத்தில் உள்ள பழைய தண்ணீரை அகற்றி, குளத்தில் உட்பகுதியில் சேர்ந்துள்ள மணல் மற்றும் பாசிகளை அகற்றினர். அத்துடன் தெப்பக்குளத்தின் படிகள் வண்ண ஓவியத்தால் அலங்கரிக்கப்பட்டன. இதனையடுத்து தெப்பக்குளத்தில் சுமார் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் நிரப்பி பழுதுபார்க்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது.

குறித்த குளம் சீரமைப்பு காரணமாக பக்தர்கள் கடந்த ஒரு மாதமாக புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முதல் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர போக்குவரத்துதுறை தலைவர் கொனகல்லா நாராயணா அவர்கள் கூறுகையில், திருப்பதி வரை பெண்கள் இலவசமாக பஸ்சில் பயணம் செய்த நிலையில், திருமலை வரை இலவச பயணத்தை ஆந்திர அரசு நீட்டித்துள்ளதாகவும், இதற்காக சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதில் திருப்பதி மலைப்பாதை சாலை என்பதால் பஸ்சில் உட்காருவதற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இந்த திட்டத்தில் ஆந்திராவை சேர்ந்த பெண்கள் மட்டுமே பயனடைய முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இலவச பயணத்துக்கு ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று ஆதாரமாக காண்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த திட்டம் தொடங்கிய மறுநாள் ஆகஸ்ட் 16 சுமார் 10 லட்சம் பெண்கள், 17-ஆம் தேதி 15 லட்சம், 18-ஆம் தேதி 18 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Devotees allowed to bathe in Tirumala Pushkarini again


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->