படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில் சேவைவை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி; டிக்கெட் விலை விவரம் உள்ளே..!
Details of the ticket prices for the Vande Bharat train with sleeper facilities inside
வருகிற 17-ந்தேதி படுக்கை வசதிகள் கொண்ட முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி, கவுகாத்தி- கொல்கத்தா இடையே தொடங்கி வைக்கவுள்ளார். ஏசி 1, ஏசி 2, ஏசி 3 வகுப்புகளை கொண்ட இந்த ரெயிலில் பயணம் செய்வதற்கான உத்தேச கட்டணத்தை ரெயில்வே அமைச்சர் கடந்த 01-ந் தேதி வெளியிட்டிருந்தார்.
அந்தவகையில், தற்போது இந்திய ரெயில்வே, டிக்கெட் விலை குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் படி, 1520 ரூபாய், 1240 ரூபாய், 960 ரூபாய் என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஏ.சி. அல்லது பகுதி அளவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் ஆகிய வசதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 1 கி.மீ. தூரத்தில் இருந்து 400 கி.மீ. தொலைக்கு ஒரே விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 400 கி.மீ. தூரத்திற்கு குறைவான இடத்திற்கு பயணம் செய்ய வேண்டுமென்றாலும், முழுத் தொகையை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 400 கி.மீ. தொலைவிற்குப் பிறகு ஒரு கி.மீ. தூரத்திற்கு மூன்று ரூபாய் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிக்கையடியோ கூறப்பட்டுள்ளது. தற்போதைய அறிவுறுத்தல்களின் படி பெண்கள் ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு, மூத்த குடிமக்கள் ஒதுக்கீடு மற்றும் பணி அனுமதிச் சீட்டு ஒதுக்கீடு மட்டுமே இருக்கும். வேறு எந்த இட ஒதுக்கீடும் இந்த ரயில் பயணத்தில் பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது..
English Summary
Details of the ticket prices for the Vande Bharat train with sleeper facilities inside