மராத்தா சமூகத்திற்கான இட ஒதுக்கீடு இரத்து - டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


மராத்தா சமூகத்திற்கு இட ஒதுக்கீடை இரத்து செய்து டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கல்வி மற்றும் வேலைகளில் மராட்டிய சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் மகாராஷ்டிரா சட்டத்தின் அரசியலமைப்பு சட்டத்திற்கு தடை கோரி இரத்து செய்ய வேண்டும் என்ற மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இன்று தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. 

இது தொடர்பான தீர்ப்பை, நீதிபதி பூஷண் தலைமையிலான நீதிபதி அமர்வு வாசித்த நிலையில், இந்த தீர்ப்பில், " ​​இந்திரா சாவ்னி தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதில் எங்களுக்கு எந்த காரணமும் இல்லை.

342-ஏ பிரிவு தொடர்பாக, நாங்கள் அரசியலமைப்பு திருத்தத்தை உறுதி செய்துள்ளோம். அது எந்தவொரு அரசியலமைப்பு விதிகளையும் மீறவில்லை. எனவே, மராத்தா இடஒதுக்கீட்டை சவால் செய்யும் ரிட் மனுவை தள்ளுபடி செய்துள்ளோம்.

மேலும், மராட்டிய இடஒதுக்கீடு வழங்கும்போது, மொத்தமான 50% இடஒதுக்கீட்டை மீறுவது அது சரியானது கிடையாது. உச்சநீதிமன்றத்தின் கொள்கைப்படி உள்ள இட ஒதுக்கீடு 50 விழுக்காடு என்ற உச்ச வரம்பை மீறுவது என்பது முடியாது. கல்வி / வேலைகளில் 50% க்கும் அதிகமான மராட்டிய சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் இரத்து செய்கிறது. 

மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கப்பட்ட வகைக்குள் கொண்டுவர கல்வி மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய சமூகமாக அறிவிக்க முடியாது. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. " என்று டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Supreme Court Cancelled Maharashtra Govt Approve Maratha Community Reservation


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal