டெல்லியில் அதிகரிக்கும் டெங்கு: விரிவான உடனடி அறிக்கை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


இது தொடர்பான விசாரணையில் கடந்த மூன்று மாதங்களில் டெங்கு காய்ச்சல் ஏன் அதிகரித்தது என்பதை விளக்கும் விதமாக அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் கொசு பரவாலுக்கு காரணமாக இருப்பவர்களுக்கு அபராதமாக ரூ.  500 இல் இருந்து 5000 வரை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் டெங்கு காய்ச்சல் பரவல் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரத்தை மாநகராட்சி வழங்குவதில்லை என தெரிவித்தார். 

இந்நிலையில் இரண்டு வாரங்களில் அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. 

இந்த அறிக்கையில் கடந்த மூன்று மாதங்களில் டெங்கு பாதிப்பு, அதிகரித்ததற்கான காரணம், விளக்கம் குறிப்பிட வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi rise Dengue High Court orders 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->