திமுக எம்பிகளுக்கு எதிரான 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு.!! பரபரப்பில் அறிவாலயம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா இருந்தபோது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடைபெற்றதாக மத்திய தணிக்கை குழு அறிக்கை அளித்ததின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. 

இந்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக கூறி ஆ ராசா கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. 

2ஜி வழக்கில் இருந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்த டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 

2ஜி அலைக்கற்றை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி மற்றும் ஆ ராசா ஆகியோர் மீதான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உகந்தது என டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டால் இருவர் மீதான மேல்முறையீட்டு வழக்கு சிபிஐ அதிகாரிகளால் மீண்டும் விசாரிக்கப்படும். விசாரணைக்கு உகந்ததல்ல என தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் கனிமொழி ஆகாசமாகியோர் 2ஜி அலைக்கற்றை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi high court verdict in 2G case today against DMK mps


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->