சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424லிருந்து 3,43,091ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,798லிருந்து 1,80,013 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,520லிருந்து 9,900 ஆக  உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கொரோனாவால் இதுவரை 41,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,327 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை 15,823 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் டெல்லியில் நாளுக்கு நாளில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடும் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi health minister admitted to hospital


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal