தண்ணீரை வீணாக்கினால் அபராதம்! அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி அரசு.! 
                                    
                                    
                                   Delhi govt fine wasting water
 
                                 
                               
                                
                                      
                                            டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவி வருவதாலும் ஹரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாலும் தற்போது டெல்லியில் தண்ணீர் கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
இருப்பினும் கட்டுமான தளங்கள், வணிக நிறுவனங்களில் சட்டவிரோதமாக தண்ணீர் இணைப்பு எடுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
இந்நிலையில் டெல்லி அரசின் நீர்வளத்துறை மந்திரி, டெல்லியில் தண்ணீர் வீணாக செலவிடப்படுவதை தவிர்க்கும் விதமாக குழுக்களை அமைத்து கண்காணிக்க நீர் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்துவதை கண்காணிக்க டெல்லி முழுவதும் சுமார் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக தண்ணீரை வணிக ரீதியாகவோ கட்டுமானங்களுக்காகவோ வாகனங்களை சுத்தம் செய்வதற்கோ பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
மேலும் தண்ணீரை வீணாக்கினால் அபராதமாக ரூ. 2000 விதிக்க நீர் வாரிய அதிகாரிகளுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
 
                                     
                                 
                   
                       English Summary
                       Delhi govt fine wasting water