தீப ஒளிப்பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்க தடை - டெல்லி முதல்வர் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் தீப ஒளிப்பண்டிகையன்று பட்டாசுகள் வெடிக்கவும், கடை உரிமையாளர்கள் தற்போது இருந்தே பட்டாசு வாங்கி வைக்கவும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள மக்களால் வெகுவாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருப்பது தீப ஒளித்திருநாள். இந்த திருநாளில் காலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து, சாப்பிட்டு பட்டாசுகள் வெடித்து தீப ஒளித்திருநாளை கொண்டாடுவார்கள். 

ஆனால், பட்டாசுகள் வெடிப்பதால் மட்டுமே காற்று மாசு வெகுவாக அதிகரிக்கிறது என்று கூறி, பட்டாசுகள் வெடிக்க கடந்த சில வருடங்களாக தடைகள் வழங்கப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் முழு நேர தடையும், சில மாநிலங்களில் குறிப்பிட்ட நேரங்கள் பட்டாசுகள் வெடிக்கவும் அனுமதி இருக்கிறது. பசுமை பட்டாசுகளை ஊக்குவிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இந்த வருடமும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ட்விட்டர் பதிவில், " கடந்த 3 வருடங்களாக தீபாவளியின் போது டெல்லியின் மாசுபாட்டின் அபாயகரமானதாக இருந்தது. இந்த நிலையை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டைப் போலவே, அனைத்து வகையான பட்டாசுகளையும் சேமித்து வைப்பது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவதற்கு முழுத் தடை விதிக்கப்படுகிறது. அதனால் மக்களின் உயிர்களை காப்பாற்ற முடியும்.

கடந்த ஆண்டு வியாபாரிகள் பட்டாசுகளை பதுக்கி வைத்த பிறகு மாசுபாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தாமதமாக முழு தடை விதிக்கப்பட்டது, இது வியாபாரிகளுக்கு இழப்பை ஏற்படுத்தியது. இந்த முறை முழு தடையை கருத்தில் கொண்டு, எந்த வித சேமிப்பையும் செய்ய வேண்டாம் என்பது அனைத்து வியாபாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi CM Arvind Kejriwal Announce bursting of firecrackers and Sales Also Banned


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->