டெல்லி கார் குண்டுவெடிப்பு ...! AI–யை ஆயுதமாக்கிய பயங்கரவாதிகள்...! - NIA வலையில் 8 பேர்
Delhi car blast Terrorists weaponized AI NIA nabs 8 people
டெல்லி செங்கோட்டையின் முன்பாக 10ஆம் தேதி வெடித்த கார் குண்டு, நகரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு கணம் நடந்த அந்த வெடிப்பில் 15 பேர் உயிரிழந்து, 30க்கும் மேற்பட்டோர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஆரம்ப விசாரணையை மேற்கொண்ட டெல்லி போலீசார், பின்னர் உள்துறை மந்திரி அமித்ஷாவின் சிறப்பு உத்தரவின் பேரில் இந்த தீவிரவாத தாக்குதலை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைக்கு ஒப்படைத்தனர்.

இந்த வழக்கில் இதுவரை 4 மருத்துவர்கள் உள்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கார் குண்டுவெடிப்பின் முக்கிய திட்டக்காரர் என கூறப்படும் டாக்டர் உமர் முகமது, வெடிப்பிடத்திலேயே தற்கொலை குண்டா தாக்குதலாளியாக உயிரிழந்தார். இந்த தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட பலரும் சிக்கியுள்ள நிலையில், முக்கிய நபரான முசாபர், ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அவரை இந்தியாவுக்கு கொண்டுவர ஜம்மு-காஷ்மீர் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த தாக்குதலை நெறிப்படுத்தியவர்கள், இந்தியாவில் இருக்கும்போதே, குண்டு தயாரிப்பு நுட்பம் முதல் தாக்குதல் திட்டம் வரை அனைத்தையும் ‘யூடியூப்’ மூலம் கற்றுக்கொண்டனர் என்பதும் பதிவுகளால் உறுதியாகியுள்ளது.
அல்பலா பல்கலைக்கழகத்தில் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிரவாத முகவர்கள் வழிநடத்தியுள்ளதாக விசாரணை கூறுகிறது.வெளிநாட்டிலிருந்து கட்டளை வழங்கிய மூவரும் உகாசா, பைசான் மற்றும் ஹாஸ்மி ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் முக்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் உமர் முகமது, அதில் ராதர், முசாமில் ஷகீல் ஆகியோர் சிரியா அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இச்சை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கட்டளைதாரர்கள், “இந்தியாவில் இருந்தே நடவடிக்கைகளை முன்னெடுங்கள்” என்று தெளிவாக உத்தரவிட்டதாகவும் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
அதோடு, குழுவினரிடையே இரகசிய தகவல்கள் பரிமாற ‘டெலிகிராம்’ மற்றும் ‘மாஸ்டோன்’ போன்ற குறியாக்க செயலிகள் பயன்படுத்தப்பட்டன. அதிர்ச்சியாக, வெடிப்பு திட்டமிடல் முதல் தப்பிச்செல்லும் வரை பல அம்சங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளையும் பெருமளவில் பயன்படுத்தியிருப்பது NIA-வின் சோதனையில் தெரியவந்துள்ளது.
English Summary
Delhi car blast Terrorists weaponized AI NIA nabs 8 people