ராமர் கோவில் கும்பாபிஷேகம்: தொடர்ந்த எதிர்ப்பு... பின்வாங்கிய எய்ம்ஸ் மருத்துவமனை!  - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. 

இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நாளை மதியம் 2:30 மணி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. 

இந்த அறிவிப்பிற்கு கண்டனம் எழுந்த நிலையில் அறிவிக்கப்பட்டிருந்த விடுப்பை எய்ம்ஸ் மருத்துவமனை திரும்ப பெற்றது.

இதனால் நாளை மருத்துவமனை வழக்கம் போல் செயல்படும். இதே போல் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை அரை நாள் விடுமுறை என மருத்துவர்மனை நிர்வாகம் அறிவித்தது. 

இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது ஜிப்மர் மருத்துவமனையில் நாளை அவசர சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெறும் என மருத்துவமனை தரப்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனால் இந்த பொதுநல வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi aiims hospital half day leave closing


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->