உயரத்தில் இருந்து விழுவதே குழந்தைகள் இறப்பதற்கு காரணம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


நாட்டில் அதிகளவில் குழந்தைகள் இறப்பது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவனை ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இறப்பதற்கு வீடுகளில் உள்ள பால்கனி போன்ற உயரமான இடங்கள் தான் காரணமாக உள்ளது. 

இந்தியாவில் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் ஒருவர் தலையில் ஏற்படும் காயத்தினால், உயிரிழக்கின்றனர். அதிலும் குறிப்பாக, தலையில் ஏற்படும் காயங்களில் 30 சதவிகிதம் குழந்தைகளிடத்தில் தான் காணப்படுகிறது. உயரத்தில் இருந்து விழுவதாலேயே குழந்தைகளுக்கு தலையில் 60 சதவிகிதம் காயம், ஏற்படுகின்றன.

இந்த உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில், “பாதுகாப்பான பால்கனி , பாதுகாப்பான குழந்தைகள்” என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் 1000 குழந்தைகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

அந்த ஆய்வில், அவர்கள் அனைவரும் உயரத்திலிருந்து விழுந்ததே மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு காரணமாக இருந்தது. அதிலும் ஆண் குழந்தைகளே  மருத்துவமனையில் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர்.

அவ்வாறு சேர்க்கப்படும் குழந்தைகளின் குடும்பம் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கி காணப்படுகிறது. 

இதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் போது பெற்றோர் வீட்டில் இல்லாததும் ஒரு காரணமாக தான் உள்ளது. இந்த விபத்துகளைத் தடுப்பதற்கு வீட்டில், குழந்தைகளின் உயரத்தைக் காட்டிலும் பால்கனியின் உயரத்தை இருமடங்கு இருக்குமாறு அமைக்க வேண்டும். 

மேலும், இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் பலரும் கருத்தரங்குகள் மற்றும் போட்டிகள் நடத்த உள்ளனர்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi AIIMS conducted medical study on childrens died


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->