144 தடை உத்தரவு... ஆம் ஆத்மி கட்சியினர் அதிரடி கைது! டெல்லியில் பதற்றம்.! நடந்து என்ன?
Delhi Aam Aadmi Party Arrest
பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக ஆம் ஆத்மி கட்சியினர் அறிவித்துள்ள நிலையில் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறை கேட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சமூக வலைதளத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து பிரதமர் இல்லத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் இல்லம் அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மெட்ரோ ரயில் நிலையம் வந்த பஞ்சாப் அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஷர்ஜோத் சிங்கை போலீசார் கைது செய்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தொண்டர்களை கலைந்து செல்ல செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Delhi Aam Aadmi Party Arrest