விவசாயிகளின் "டெல்லி சலோ" போராட்டம் .. பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி டெல்லியை நோக்கி பேரணி தொடங்கின. அவர்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி செல்லும் பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆனால், 4 கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்ததால் தடையை மீறி பொக்லைன் இயந்திரங்களுடன் எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி ஜியான் சிங் (78) என்பவர் ஹரியான - பஞ்சாப் எல்லைப் பகுதியான ஷம்புவில் மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து போலீசாருடன் நடைபெற்ற மோதலில் மஞ்சித் சிங் (70), நரிந்தர்பால் சிங் (45) ஆகிய இரு விவசாயிகள் உயிரிழந்தனர்.

இதனால் ஏற்பட்ட கலவரத்தால் ஷம்புவில் குவிந்த விவசாயிகளை துணை ராணுவப் படையினர் தடுத்து நிறுத்தி, கூட்டத்தை கலைக்க விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசினர். அதேபோன்று, பஞ்சாப் அருகே கானெரியிலும் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில், பஞ்சாப்பை சேர்ந்த 22 வயதான சுப்கரன் சிங் என்ற விவசாயி தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று (பிப்.23) போராட்டத்தில் பங்கேற்ற 62 வயதான தர்ஷன் சிங் என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும் இன்று நடைபெற்ற போராட்டத்தின் ஷம்பு எல்லை நோக்கி சென்று கொண்டிருந்தபோது பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூர் பகுதியை சேர்ந்த குல்தீப் சிங் என்ற விவசாயி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன் மூலம் நடப்பாண்டில் ‘டெல்லி சலோ’ போராட்டக் களத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Death toll increased in Delhi chalo farmers protest


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->