#Breaking :: மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய கவர்னர் நியமனம்! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல்  அவருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. கடந்த ஓராண்டாக மேற்குவங்க அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஜக்தீப் தன்கர் இழுத்தடித்து வந்தார். இதனை அடுத்து ஆளுநர் பதவியில் இருந்து ஜக்தீப் தன்கர் நீக்கப்பட்டு மேற்குவங்க மாநிலத்திற்கு பொறுப்பு கவர்னராக தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் முழு நேர ஆளுநராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த கொள்கை வகுப்பாளரரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர்.சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கு வங்கத்தின் நிரந்தர ஆளுநராக ஆனந்த் போஸை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார். இதற்கான அறிவிப்பை குடியரசு மாளிகையின் செய்தி தொடர்பாளர் அஜய் குமார் சிங் வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CV Ananda boss appointed as governor of West Bengal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->