அந்த 4 வாக்குச்சாவடிகளில் கூடுதல் வாக்கு பதிவு எப்படி? சி.பி.எம் பரபரப்பு புகார்.!!
CPM complaint extra vote polling in 4 Booths
இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 21 மாநிலங்களில் 12 மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் முதற்கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது.
அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலின் போது குறிப்பிட்ட நான்கு வாக்குச்சாவடிகள் மட்டும் மொத்த வாக்குகளை விட கூடுதல் வாக்கு பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.

அந்த புகாரில் 545 வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடியில் 574 வாக்குகள் பதிவாகியுள்ளது எனவும், 1290 வாக்காளர்கள் உள்ள மற்றொரு வாக்குச்சாவடியில் 1292 வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் புகார் அளித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த புகாரால் குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்கு பதிவு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
CPM complaint extra vote polling in 4 Booths