உத்திரப்பிரதேசத்தில் தொகுதி வாரியாக பசுக்கள் காப்பகம்! முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


உத்திரப்பிரதேசத்தில் தொகுதிவாரியாக பசுக்கள் காப்பகம் அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்திரபிரதேசம் தலைநகர் லக்னோவில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர், வெயிலின் தாக்கத்திலிருந்து பசுக்களைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் பசுக்கள் காப்பகங்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இந்த காப்பகங்களில் 2000 முதல் 2500 வரை பசுக்கள் பாதுகாப்பு வகையில் சிறப்பான கட்டமைப்பு இருக்க வேண்டும் என்றும், பசுக்களுக்கு தேவையான தீவனங்களும் வேண்டிய அளவில் காப்பகங்களில் இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், தற்போது கோதுமை அறுவடை நடப்பதால் பசுக்களுக்கு தேவையான தீவனங்களை உடனடி கொள்முதல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cow archive for each constituency


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->